Shopify Flow

அனைத்தையும் தானியக்கமாக்கி, உங்கள் வணிகத்தில் மீண்டும் கவனம் செலுத்துங்கள்

பிரத்தியேகப் பணிப்பாய்வுகளை உருவாக்குங்கள், உங்களின் தற்போதைய செயலிகள் மூலம் கூடுதல் பலன்களைப் பெறுங்கள், உங்கள் வணிகம் வளர்ச்சியடைவதைக் காணுங்கள்.

Shopify ஸ்டோர் இல்லையா? இலவசமாக ஒன்றைத் தொடங்குங்கள்

மூன்று வெவ்வேறு வகையான பணிப்பாய்வுகள் காட்டப்பட்டுள்ளன: ஒன்று "ரன் செய்யத் திட்டமிடப்பட்டது", மற்ற இரண்டு "தொடங்கும் நேரம்" தொடர்பான பணிப்பாய்வுகள்.
“சரக்கு இருப்பு அளவு மாற்றப்பட்டது” என்ற தூண்டுதலைப் பயன்படுத்திப் பணிப்பாய்வு உருவாக்கப்படுகிறது, அதோடு பணிப்பாய்வு தொடரும்போது பல நிபந்தனைகளும் செயல்களும் புதுப்பிக்கப்படும்.

குறியீடுகள் (code) எழுதத் தேவையில்லாத கட்டுமானத் தொகுதிகள் மூலம் பிரத்தியேக ஈகாமர்ஸ் தானியக்கமாக்கல்களை உருவாக்குங்கள்

எளிமையான தூண்டுதல், நிபந்தனை மற்றும் செயல்பாட்டுத் தொகுதிகள் மூலம், யார் வேண்டுமானாலும் பணிப்பாய்வை விரைவாக உருவாக்க முடியும்.

பிரத்தியேகத் தீர்வுகள். எல்லையற்ற சாத்தியக்கூறுகள்.

எளிமையான செயல்பாடுகள் முதல் உங்கள் செயலிகளுடன் இணையும் பல-படிநிலை கொண்ட பணிப்பாய்வுகள் வரை, மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய பணிகளைத் தானியக்கமாக்குவதற்கான நெகிழ்வுத்தன்மையை Flow வழங்குகிறது, இதன் மூலம் நீங்கள் உங்கள் வணிகத்தில் கவனம் செலுத்த முடியும்.

சரக்கு மேலாண்மை

தயாரிப்புகள் கையிருப்பில் இல்லாதபோது அவற்றை உங்கள் தளத்தில் மறைக்கவும், பொருட்கள் குறையும்போது அவற்றை உடனடியாக மீண்டும் ஆர்டர் செய்யவும் மற்றும் பலவற்றையும் செய்யலாம்.

சரக்கு மேலாண்மை உத்தி வழிகாட்டியப் படியுங்கள் 

மோசடித் தடுப்பு

அதிக ஆபத்துள்ள ஆர்டர்களைக் கண்டறியும் பணிப்பாய்வை அமைப்பதன் மூலம், ஒவ்வொரு ஆர்டரையும் நீங்களே கைமுறையாகச் சரிபார்க்க வேண்டியதில்லை.

மோசடித் தடுப்பு உத்தி வழிகாட்டியைப் படியுங்கள் 

லாயல்டி மற்றும் தக்கவைப்பு

மொத்தச் செலவு, மொத்த ஆர்டர்கள், சந்தாக்கள் மற்றும் பல அளவுகோல்களின் அடிப்படையில் வாடிக்கையாளர்களைக் கண்டறியுங்கள், தடமறியுங்கள் மற்றும் வெகுமதியளியுங்கள்.

லாயல்டி மற்றும் தக்கவைப்பு உத்தி வழிகாட்டியைப் படியுங்கள் 

நிறைவேற்ற மேலாண்மை

ஆர்டர்களைத் தானாகவே மதிப்பாய்வு செய்து, முன்-அமைக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அவற்றை நிறுத்திவைக்கலாம் அல்லது நிறைவேற்றத்திற்கு வெளியிடலாம். அத்துடன் இன்னும் பலவற்றையும் செய்யலாம்.

நிறைவேற்ற மேலாண்மை உத்தி வழிகாட்டியைப் படியுங்கள் 
Flow வார்ப்புருக்களின் கிடைக்கக்கூடிய அனைத்து வகைகளையும் காட்டும், நிர்வாகி பார்வையிலிருந்து "வார்ப்புருக்கள்" தொகுதி.

பயன்படுத்தத் தயாராகவுள்ள 'பிளக் அண்ட் பிளே' (plug-and-play) வார்ப்புருக்கள்

உங்கள் வணிகங்கள் மிகவும் திறமையாகச் செயல்பட உதவ, அதிக நேரம் எடுக்கும் பொதுவான பணிகளில் சிலவற்றை விரைவாகத் தானியக்கமாக்க உதவும் வகையில் முன்பே உருவாக்கப்பட்ட, குறியீடுகள் தேவையற்ற வார்ப்புருக்களை உருவாக்கியுள்ளோம்.

உங்கள் தேவைக்கேற்ப திட்டமிடலாம்

ஒரு பணிப்பாய்வை ரன் செய்ய, இனி ஒரு நிகழ்வு நடக்க வேண்டிய அவசியமில்லை—திட்டமிடப்பட்ட தானியக்கமாக்கல்கள் மூலம் எப்போது தரவைப் பெறுவது மற்றும் அறிக்கைகளை ரன் செய்வது என்பதை நீங்களே தேர்ந்தெடுக்கலாம், இது Flow-இல் முற்றிலும் புதிய சாத்தியக்கூறுகளைத் திறக்கிறது.
“சரக்கு இருப்பு அளவு மாற்றப்பட்டது” என்ற தூண்டுதலைப் பயன்படுத்திப் பணிப்பாய்வு உருவாக்கப்படுகிறது, அதோடு பணிப்பாய்வு தொடரும்போது பல நிபந்தனைகளும் செயல்களும் புதுப்பிக்கப்படும்.

நீங்கள் ஓய்வெடுக்க, இது எப்போதுமே இயங்கிக்கொண்டிருக்கும்

பிளாக் ஃப்ரைடே சைபர் மண்டே போன்ற மாபெரும் விற்பனை நேரங்களில் ஏற்படும் சவால்கள் மற்றும் அழுத்தங்களை Flow கையாள்கிறது, அத்துடன் எளிதாக மறக்கக்கூடிய கைமுறைப் பணிகளையும் இது கவனித்துக்கொள்வதால், நீங்கள் மிக முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.
ஒரு பெண் தையல் இயந்திரத்தின் முன் அமர்ந்து ஒரு துணியில் வேலை செய்துகொண்டிருக்கிறார். அவரது படத்திற்குப் பின்னாலும் முன்னாலும் ஒரு பணிப்பாய்வு செயல்பாட்டில் இருப்பதைக் குறிக்கும் ஐகான்களைக் காண்கிறோம்.

562M

பிளாக் ஃப்ரைடே சைபர் மண்டே விற்பனையின் போது ரன் செய்யப்பட்ட பணிப்பாய்வுகள்

1B+

ஒவ்வொரு மாதமும் தானியக்கமாக்கப்படும் முடிவுகள்

22k

Flow நிறைவுசெய்த தனித்துவமான பணிகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஈகாமர்ஸ் தானியக்கமாக்கல் என்றால் என்ன?

ஈகாமர்ஸ் தானியக்கமாக்கல் என்பது உங்கள் வணிகத்திற்குள் இருக்கும் பணிகள், செயல்முறைகள் அல்லது பிரச்சாரங்களை, சரியாகத் தேவைப்படும்போது அறிவார்ந்த முறையில் செயல்படும் தானியக்கமாக்கல்களாக மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட மென்பொருளாகும். இதன்மூலம் வணிகங்கள் தங்களிடம் உள்ளதைக் கொண்டு இன்னும் அதிகமாகச் சாதிக்க முடியும்.

எனக்கு ஈகாமர்ஸ் தானியக்கமாக்கல் ஏன் தேவை?

சிக்கல் மிகவும் எளிதானது: ஒரு வணிகம் அளவிடப்படும்போது, அதன் தேவைகள், சிக்கல்கள் மற்றும் மீண்டும் மீண்டும் செய்யும் செயல்களின் அளவு அதிகரிக்கிறது. முன்பு வேலை செய்த அமைப்புகள் படிப்படியாகச் செயல்திறனற்றதாகிச் செயலிழந்துவிடுகின்றன. அதற்குப் பதிலாக, நிறுவனங்கள் அதிக நேரம் எடுக்கும் மாற்று வழிகளை நாடுகின்றன—பொத்தான்களை அழுத்துவது போன்ற அவசரப் பணிகளுக்காக, முக்கியமான பணிகளுக்குச் செலவிட வேண்டிய நேரம் வீணாக்கப்படுகிறது. அல்லது நிறுவனங்கள் புதியவர்களைப் பணியமர்த்துகின்றன. துரதிர்ஷ்டவசமாக, மனித உழைப்பை அந்த அளவுக்கு அளவிட முடியாது. ஆனால் அது மனிதர்களின் மதிப்பைக் குறைக்காது—சொல்லப்போனால், அது அதனை மேலும் வலுப்படுத்துகிறது. ஒரு பணிப்பாய்வு செய்யக்கூடிய பணிகளைத் தவிர்த்து, முக்கியச் செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் திறன் கொண்ட மனிதர்களே உங்களின் மிகவும் சக்திவாய்ந்த வளம்.

பணிப்பாய்வு தானியக்கமாக்கலுக்கான சில எடுத்துக்காட்டுகள் யாவை?

பிரிவு மற்றும் சந்தைப்படுத்தலுக்காக வாடிக்கையாளர்களுக்குக் குறியிடுதல், தயாரிப்புகளை மறைத்தல் மற்றும் குறைவாக உள்ள அல்லது கையிருப்பில் இல்லாத பொருட்களுக்கு மீண்டும் ஆர்டர் செய்யத் தொடங்குதல், அல்லது அதிக ஆபத்துள்ள ஆர்டர்களைத் தடமறிந்து நிறுத்துதல் போன்ற பல வேறுபட்ட வடிவங்களை ஈகாமர்ஸ் தானியக்கமாக்கல்கள் எடுக்கலாம். ஒவ்வொரு பணிப்பாய்வின் இலக்கும் ஒன்றுதான்: வணிகர்கள் தங்கள் வணிகத்தை அளவிடுவதற்குத் தேவையான பணிப்பாய்வை உருவாக்க அனுமதிப்பது.

சில மிகவும் பிரபலமான எடுத்துக்காட்டுகள் இங்கே:

  • சரக்கு மேலாண்மை: கையிருப்பில் இல்லாத தயாரிப்புகளைப் பிரசுரிக்காமல் இருப்பதுடன், உங்கள் சந்தைப்படுத்தல் குழுவிற்கு ஒரு Slack செய்தி அல்லது மின்னஞ்சலை அனுப்புவதன் மூலம் அவர்கள் விளம்பரங்களை இடைநிறுத்தலாம்
  • மோசடித் தடுப்பு: ஒரு ஸ்டோருக்கு வழக்கத்திற்கு மாறான $5000-க்கு மேலான ஆர்டரை நிறைவேற்றுவதற்கு முன்பு, அதனை மதிப்பாய்வு செய்யுமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்புதல்
  • தயாரிப்பு மதிப்பாய்வுகள்: ஒரு எதிர்மறையான மதிப்பாய்வு பதிவிடப்படும்போது, தானாகவே வாடிக்கையாளர் ஆதரவு டிக்கெட்டை உருவாக்கி, ஒரு Slack செய்தியை அனுப்புதல்
  • லாயல்டி: ஒரு வாடிக்கையாளர் இரண்டாவது முறையாகக் கொள்முதல் செய்த பிறகு, லாயல்டி புள்ளிகளை வழங்கி, நன்றி தெரிவிக்கும் SMS-ஐ அனுப்புதல்

Flow-இல் பணிப்பாய்வு தானியக்கமாக்கல் எவ்வாறு செயல்படுகிறது?

Flow ஆனது குறியீடுகள் தேவையற்ற எளிமையான “தூண்டுதல், நிபந்தனை மற்றும் செயல்” வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டது. அடிப்படையில், “தூண்டுதல்” என்பது Flow எதிர்பார்த்திருக்கும் ஒரு நிகழ்வாகும், அது தானியக்கமாக்கலைச் செயல்பட வைக்கிறது, பின்னர் ஒரு “நிபந்தனை” பூர்த்தி செய்யப்பட வேண்டும், அதன்பிறகு அந்த நிபந்தனை பூர்த்தியாகும்போது முடிக்கப்படும் பணியே “செயல்” ஆகும்.

வாடிக்கையாளரைத் தானாகவே உங்கள் லாயல்டி திட்டத்தில் சேர்க்கும் பணிப்பாய்வுக்கான ஒரு எடுத்துக்காட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • தூண்டுதல்: ஒரு ஆர்டர் செய்யப்படுகிறது.
  • நிபந்தனை: ஆர்டரின் மொத்த மதிப்பு $500 அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும்.
  • செயல்: கணினியில் வாடிக்கையாளர் VIP எனக் குறிக்கப்படுகிறார்.

ஈகாமர்ஸ் பணிப்பாய்வுகளை நான் எவ்வாறு தானியக்கமாக்கத் தொடங்குவது?

இது மிகவும் எளிதானது. எங்கள் ஆப் ஸ்டோரில் Flow-ஐப் பதிவிறக்குவதன் மூலம் தொடங்குங்கள். பின்னர் வணிகங்கள் தானியக்கமாக்க வேண்டிய டஜன் கணக்கான பொதுவான பணிகளைத் தானியக்கமாக்க வடிவமைக்கப்பட்டுள்ள முன்பே-உருவாக்கப்பட்ட எங்கள் வார்ப்புருக்களில் ஒன்றை (அல்லது பலவற்றை) பயன்படுத்தத் தொடங்குங்கள். அல்லது குறியீடுகள் தேவையற்ற எங்களின் “தூண்டுதல், நிபந்தனை மற்றும் செயல்” பணிப்பாய்வு உருவாக்குநரைப் பயன்படுத்தி, உங்கள் வணிகம் எதிர்கொள்ளும் தனித்துவமான சிக்கல்களைத் தீர்க்க உங்களின் சொந்தப் பணிப்பாய்வுகளை உருவாக்கத் தொடங்குங்கள்.

Flow ஆங்கிலத்தைத் தவிர வேறு ஏதேனும் மொழிகளில் கிடைக்குமா?

தற்போது Flow பிளாட்ஃபார்ம் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.

இன்றே Flow-ஐப் பெற்று, உங்கள் வணிக வளர்ச்சிக்குத் தேவையான பிரத்தியேகத் தானியக்கமாக்கல்களை உருவாக்கத் தொடங்குங்கள்

Basic, Grow, Advanced மற்றும் Shopify Plus திட்டங்களில் உள்ள அனைத்து நாடுகளின் வணிகங்களுக்கும் Shopify Flow கிடைக்கிறது. Flow ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.