சர்வதேச விற்பனை

உலகெங்கும் வளருங்கள்

Shopify-இன் உலகளாவிய வர்த்தகத் தளத்தில் அதிக பிராந்தியங்களில் உள்ள பல வாங்குபவர்களுக்கு விற்பனை செய்யுங்கள்.

Shopify ஸ்டோர் இல்லையா? இலவசமாகத் தொடங்குங்கள்

உள்ளூர்மயமாக்கப்பட்ட நாணயங்கள், கொடிகளைக் காட்டும் மிதக்கும் தயாரிப்புக் கார்டுகளுடன் கூடிய ஸ்டோர்ஃபிரண்ட் இடைமுகம்.
  • Walk London
  • Fiyah
  • WOLFpak
  • Made by Mary
  • FTC

சந்தைகள்

சர்வதேச ஈர்ப்புடன் ஸ்டோர்ஃபிரண்டுகளை அறிமுகப்படுத்துங்கள்

வெவ்வேறு வகையான வாங்குபவர்களுக்கு நீங்கள் எப்படி விற்பனை செய்கிறீர்கள் என்பதை உங்களின் ஒரே ஸ்டோர் மூலம் எளிதாக மாற்றியமைக்கச் சந்தைகள் உதவுகின்றன.
மிதக்கும் உள்ளூர்மயமாக்கப்பட்ட விலைக் குறிச்சொற்களுடன் ஸ்கேட் ஸ்டோரில் இருக்கும் இருவர்.

முன்பணச் செலவுகள் இல்லை

விற்பனையைத் தொடங்குங்கள், வெற்றிகரமாக மாறும் விற்பனைகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்துங்கள்.

விற்பனையை 40% வரை பெருக்குங்கள்*

இலவச உள்ளூர்மயமாக்கல் கருவிகளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள வாங்குபவர்களிடம் நம்பிக்கையை உருவாக்குங்கள்.

எங்கும் விரிவுபடுத்துங்கள்

தானியங்கு அமைப்புகளுடன் புதிய சந்தைகளைத் திறந்து, ஒவ்வொரு விவரத்தையும் தனிப்பயனாக்குங்கள்.

*EY-ஆல் Shopify-க்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 567 பிராண்டுகளின் மாதிரியை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச விற்பனைத் தரவு.

உள்ளூர்மயமாக்கல்

உள்ளூர்க்காரரைப் போலத் தோற்றமளித்து, அவர்களைப் போலவே விற்பனையும் செய்யுங்கள்

ஒவ்வொரு சந்தையிலும் விற்பனையை மாற்றுவதற்கான சிறந்த ஷாப்பிங் சூழலை உருவாக்குங்கள்.

மொழிபெயர்ப்புகள் & SEO

Translate & Adapt மூலம் வாங்குபவர்கள் உங்கள் தயாரிப்புகளைப் புரிந்துகொள்ள உதவுவதுடன் SEO-ஐயும் மேம்படுத்துங்கள்.

சர்வதேசத் தீம்கள்

பல நாணயம், மொழிபெயர்ப்பு அமைப்புகளுடன் உருவாக்கப்பட்ட தீம்களின் கேட்டலாக்கிலிருந்து தேர்ந்தெடுங்கள்.

பிரத்யேக URLகள்

.ca அல்லது .eu போன்ற சர்வதேச டொமைன்கள் மூலம் வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரைக் கண்டறிந்து ஷாப்பிங் செய்வதை எளிதாக்குங்கள்.

பாதுகாப்பான உள்ளூர் செக்அவுட்

சிறப்பாக மாற்றும் செக்அவுட் மூலம் 130-க்கும் மேற்பட்ட நாணயங்களில் விற்பனை செய்து, உங்கள் நாணயத்திலேயே பேஅவுட்டைப் பெறுங்கள்.

பிராந்திய முகவரிப் படிவங்கள்

எல்லாப் பிராந்தியங்களிலும் வேலை செய்யும் பயனர் நட்புப் படிவங்கள் மூலம் கைவிடப்பட்ட கார்டுகளைக் குறைத்திடுங்கள்.

சந்தை சார்ந்த தயாரிப்புகள்

தனித்துவமான தயாரிப்புக் கேட்டலாக்குகள் மூலம் தயாரிப்பு மற்றும் ஷிப்பிங் கட்டுப்பாடுகளைத் தவிருங்கள்.

நீங்கள் சம்பாதிப்பதில் அதிகப் பங்கை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்

நாணய மாற்றம், சுங்க வரிகள், இறக்குமதி வரிகள் ஆகியவற்றுக்கான செலவுகள் உங்கள் பேஅவுட்டிலிருந்து போக வேண்டியதில்லை.
விலை நிர்ணயம் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
வரவேற்பறைக் கம்பளத்தில் மரத்தாலான பொம்மைகளுடன் விளையாடும் பெண்ணும் குழந்தையும்.

நாங்கள் ஒரு புதிய சந்தையில் அறிமுகமாகும்போது, நாணய மாற்றம் செய்வதுடன் தயாரிப்பு விலைகளைப் புதுப்பிப்பதை Shopify-இன் சர்வதேச விற்பனைக் கருவிகள் எங்களுக்கு மிகவும் எளிதாக்கியுள்ளன.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சந்தைகள் என்றால் என்ன?

சந்தை என்பது நாடு, பிராந்தியம் அல்லது வாடிக்கையாளர் வகையின் அடிப்படையில் நீங்கள் வரையறுக்கும் வாடிக்கையாளர்களின் குழுவாகும். Shopify Markets மூலம், ரீடெய்ல் மற்றும் B2B வாங்குபவர்கள் என இருவருக்குமான சந்தைகளை உங்களால் உருவாக்க முடியும். மேலும், உள்ளூர் நாணயங்கள், விலை நிர்ணயம் ஆகியவற்றை அமைத்து, எந்தெந்தத் தயாரிப்புகள் கிடைக்கும் என்பதைத் தேர்வுசெய்து, ஒவ்வொரு சந்தைக்கும் ஏற்ப உங்களின் ஸ்டோர்ஃபிரண்ட் அனுபவத்தை மாற்றியமைக்கலாம். இந்த அமைப்புகள் அனைத்தும் உங்களால் உள்ளமைக்கப்பட்டு, நிர்வகிக்கப்படும்.

சந்தைத் தனிப்பயனாக்கம் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

சர்வதேச அளவில் விற்பனையைத் தொடங்குவதற்கான எளிய வழி என்ன?

நீங்கள் தகுதியுள்ள பிராந்தியத்தில் இருந்து, நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்கிறீர்கள் எனில், உடனடியாகத் தொடங்குவதற்கு Shopify Managed Markets-ஐப் பயன்படுத்துவது மிகச் சிறந்த வழியாகும். இது வெளிநாட்டு வரிகள், இறக்குமதிக் கட்டணங்களைக் கையாளும் 'மெர்ச்சண்ட்-ஆஃப்-ரெக்கார்ட்' சேவையின் மூலம் எல்லை தாண்டி விற்பனை செய்வதில் உள்ள பல்வேறு வேலைகள் மற்றும் அபாயங்களைத் தானியக்கமாக்குகிறது. அத்துடன் தகுதியான சார்ஜ்பேக்குகளுக்கான பாதுகாப்பை அளித்து, சந்தைகள் முழுவதும் உங்கள் லாப வரம்புகளைச் சீராக வைத்திருக்க உதவும் தானியங்கு விலை மாற்றங்களையும் வழங்குகிறது.

தகுதியுள்ள பிராந்தியங்களுக்கு வெளியே உள்ள வணிகர்கள், எந்தவொரு திட்டத்திலும் சர்வதேச அளவில் விற்பனை செய்ய Shopify Markets அனுமதிக்கிறது. உள்ளூர் நாணயங்கள், சந்தை சார்ந்த விலை நிர்ணயம், மொழிபெயர்ப்புகள், சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை நீங்களே உள்ளமைக்கலாம்.

சர்வதேச விற்பனையைச் சாத்தியமாக்குங்கள்

Shopify ஸ்டோர் இல்லையா? இலவசமாகத் தொடங்குங்கள்